தீர்வின்றி தொடரும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம்....
வெகு நாட்களாக தாங்கள் போராடி வரும் நிலையில் இதுவரையில் நம்பிக்கை தரக்கூடிய எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத மத்திய, மாகாண அரசுகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றார்கள் என்பது தமக்கு கேள்வியாகவே இருந்து வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமக்கான தொழில் உரிமையினை வழங்குமாறு கோரி காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கும் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் எவ்விதத் தீர்வுமின்றி 135வது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பட்டதாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்னர்.
இங்கு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் தலைவர் கிஷாந்த் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தினமும் பல்வேறு பிரச்சினைகளை சுமந்த வண்ணமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து செல்லும் போது தமது நிலை தொடர்பில் உரியவர்கள் நடவடிக்கையெடுக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது.
தமது போராட்டத்திற்கு தீர்வு பெற்றுத்தரும் வகையில் ஒரு சின்ன நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
1700 ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறைசேரி அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இதுவரையில் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கையெதுவும் எடுக்காமை அரசியல்வாதிகளின் அலட்சியத் தன்மையா? அல்லது அதிகாரிகளின் அலட்சியத்தன்மையா என்பது தெரியாதுள்ளது.
எனவே இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான அழுத்தங்களை எமது அரசியல்வாதிகள் வழங்க வேண்டும். இதில் எந்த காழ்ப்புணர்ச்சியையும் காட்டாது கற்றவர்கள் வீதியில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பிரச்சியை தீர்க்க வேண்டும் எனவும் உளப்பாங்குடன் செயற்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தீர்வின்றி தொடரும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம்....
Reviewed by Author
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment