யாழில் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்...
நாட்டிலுள்ள சகல மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் சமாதான வாழ்விற்கான சர்வமதங்களின் நல்லிணக்கம் எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு தேசிய ஹரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ். காங்கேசன்துறை தல்செவன விடுதியில் இடம்பெற்றது.
மதங்களுக்கிடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் இந்து, பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களின் மதகுருமார் உட்பட சமய பிரதிநிதிகளை உள்ளடக்கி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தேசிய ஹரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் மகேந்திர குணதிலக்க தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின்போது சர்வ மதங்களின் மதகுருமார் மற்றும் சமய பிரதிநிதிகளுக்கு சமய நல்லிணக்கம் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், சமயஸ்தலங்களுக்கான கள விஜயங்களும் மேற்கொள்ளப்பட்டன.
யாழில் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்...
Reviewed by Author
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment