மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இன்று விஜயம் செய்துள்ளார்.
குறித்த பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தின் அழைப்பின் அடிப்படையில் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காகவே இந்த விஜயம் அமைந்துள்ளது.
இதன்போது, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியினை முழுமையான தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் பாடசாலை பழைய மாணவ சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு எழுத்து மூலமான ஆவணமும் ஆளுனரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஸ்தாபகர் வில்லியம் ஓல்டின் நினைவுக்கல் இருக்கும் இடமான மட்டக்களப்பு கூட்டுறவு சங்க கட்டடத்தையும், அதன் வளாகத்தையும் இக்கல்லூரிக்கு மீண்டும் பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் பாடசாலை அவரின் நினைவாக செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை வழங்குவதாக உறுதிமொழி வழங்கினார்.
இதில் ஆளுனரின் பாரியார், ஆளுனரின் செயலாளர் முரளீஸ்வரன், முன்னாள் பாடசாலையின் அதிபர் பிறின்ஸ் காசிநாதர், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment