வட மாகாண சுகாதார தொண்டர்கள் சுகாதார அமைச்சருடன் சந்திப்பு....
வட மாகாணத்தில் 86 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுகாதார தொண்டர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினை சந்தித்தனர்.
வட மாகாண சுகாதார அமைச்சின் வவுனியா உப அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அத்துடன், 5 மாவட்டங்களிலும் யுத்த காலத்தில் இருந்து சுகாதார தொண்டர்களாக பணியாற்றி நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தை துன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 40 பேர் சுகாதார தொண்டர்கள் கலந்து கொள்டுள்ளனர்.
இதன்போது மத்திய சுகாதார அமைச்சுக்கு வட மாகாண சுகாதார அமைச்சு கவனத்தில் கொண்டு சென்றுள்ள விடயங்கள் மற்றும் ஜனாதிபதியினால் சுகாதார தொண்டர்கள் நிரந்தர நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்பன தொடர்பாக சுகாதார அமைச்சரினால் சுகாதார தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சுகாதார தொண்டர்களும் தாம் யுத்தகாலகத்தில் பணியாற்றிமை மற்றும் தமது போராட்டத்திற்கு கிடைக்கவேண்டிய பயன் மற்றும் குடும்ப நிலைமைகள் அமைச்சருக்கு எடுத்தியம்பியிருந்தனர்.
மேலும் பிரகாரம் சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் என வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்த நிலையில் சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது.
வட மாகாண சுகாதார தொண்டர்கள் சுகாதார அமைச்சருடன் சந்திப்பு....
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment