வட மாகாண முதலமைச்சருக்கும், ஜேர்மனிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு....
வட மாகாண மக்களின் உற்பத்திகளை வெளிநாட்டில் சந்தைப்படுத்துவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜேர்மனிய தூதுவர் ஜோன் ரோக்டியிற்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், ஜேர்மனிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் ரோக்டி மற்றும் அவரது குழுவினருக்கும் இடையில் நேற்று(28) இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜேர்மனிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தொழில் பயிற்சிகள் மிகத்திறமையான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதாக சுட்டிக்காட்டினார்.
வட மாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளுக்கு போதியளவு முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், வட மாகாண மக்களின் உற்பத்திகளை வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் எடுக்க வேண்டுமென ஜேர்மனிய தூதுவர் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மன் நாட்டிற்கும், வட மாகாணத்திற்கும் இடையில் எவ்வாறு பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்த முடியுமென்பது தொடர்பில் விரிவாக பேசப்பட்டதாக முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வட மாகாண மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்துடன் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண முதலமைச்சருக்கும், ஜேர்மனிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு....
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment