தமிழர்களின் அன்புக்கு அளவே இல்லை: வெற்றிக்கு பின் பேசிய டோனி....
தமிழர்களின் அன்புக்கு அளவே இல்லை என்று இந்திய அணி வீரர் டோனி கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று, தமிழகத்தில் TNPL பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்தாண்டு துவங்கப்பட்டது.
இத்தொடரில் தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், கோவை, காரைக்குடி, திருவள்ளூர், திருச்சி, மதுரை என 8 அணிகள் பங்கேற்றன.
அதே போன்று இந்தாண்டிற்கான தொடர் இன்று சென்னையில் துவங்கப்பட்டது. இதை டோனி கோலாகலமாக துவங்கி வைத்தார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் தடை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்ப வந்துள்ளதால், அந்தணியை வரவேற்க சிக்சர் போட்டி நடத்தப்பட்டது.
இந்த சிக்ஸர் போட்டியில் கலந்து கொண்ட டோனி, அதிக தூரம் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றார். வெற்றிக்கு பின்னர் டோனி கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடாமால் போனாலும், ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
குறையவில்லை. இது தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள அன்பை காட்டுகிறது. தமிழர்களின் அன்புக்கு அளவே இல்லை. எனது தாய்விட்டில் இருக்கும் உணர்வை எனக்கு இது அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழர்களின் அன்புக்கு அளவே இல்லை: வெற்றிக்கு பின் பேசிய டோனி....
Reviewed by Author
on
July 23, 2017
Rating:
Reviewed by Author
on
July 23, 2017
Rating:


No comments:
Post a Comment