அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கருசலில் பதற்றம் தொடர்கின்றது-ஆலயத்தின் மீது கல் வீசி தாக்குதல்-நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிப்பு.-Photos

தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி விவகாரத்தினை தொடர்ந்து கடந்த சில தினங்களாக அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் காலை திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது இனம் தெரியாத நபர்கள் ஆலயம் மீது கற்களினால் வீசி தாக்குதல்களை மேற்கொண்டமையினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை(6) காலை 10 மணியளவில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

-எனினும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணிக்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்ற பதிவாளர் குறித்த இடத்தில் இருந்து சென்ற சில நேரத்தில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை மேற்கொண்டு வந்ததோடு,அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (7) மதியம் குறித்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திறண்டு வந்து குறித்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித்தூண்களை உடைத்ததோடு,அப்பகுதி மக்களை அச்சுரூத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக கருசல் கிராம மக்கள் தெரிவித்தனர்.

-எனினும் சுற்று வேலிக்கான தூண்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

-மேலும் கருசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற குறித்த நபர்கள் விட்டின் பின் புரம் சென்று வீட்டு அறை ஒன்றிற்கு தீ வைத்துள்ளனர்.

-இதன் காரணமாக குறித்த வீட்டின் அறை ஒன்றினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எறிந்து நாசமாகியுள்ளது.இதன் போது குறித்த வீட்டில் காணப்பட்ட மாதாவின் திருச்சுருபமும் எரியூட்டப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில தினங்களாக கருசல் கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கும்,பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த முஸ்ஸீம்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

-நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட பெரிய கருசல் கிராமத்தைச சேர்ந்த சிலரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் மக்களினால் அடையாளம் காணப்பட்ட வன்முறையை தூண்டி விட்ட பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை மக்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்ய போதும் அரசியல் அழுத்தம் காரணமாக குறித்த நபரை பொலிஸார் விடுவித்துள்ளதாக கரிசல் கிராம மக்கள் குற்றம் சட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது குறித்த கிராமத்தின் நலனை கருத்தில் கொண்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

எனினும் திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களினால் எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.இதனால் திருப்பலியில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் கோப நிலை ஏற்பட்டது.

-இதனால் அங்கு மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது.உடனடியாக கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்தரையாடியதோடு மக்களை அமைதி காக்குமாறு வேண்டு கோள் விடுத்தனர்.

மேலும் குறித்த கிராமத்தில் வன்முறையை ஏற்படுத்தியவர்களை பொலிஸார் கைது செய்யாத நிலையில் அவர்கள் சுதந்திரமாக நடமாடித்திரிவதாக கருசல் கிராம மக்கள் தெரிவித்தனர்.
நியூ மன்னார்
-மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியர்கசர்,உதவி பொலிஸ் அத்தியட்சர் உள்ளடங்களாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமையை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கான பொலிஸார் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையை தூண்டி விட்டவர்களை முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கருசல் மற்றும் பெரிய கருசல் கிராமங்களில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.








மன்னார் கருசலில் பதற்றம் தொடர்கின்றது-ஆலயத்தின் மீது கல் வீசி தாக்குதல்-நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிப்பு.-Photos Reviewed by NEWMANNAR on July 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.