கான்பெடரேசன் கால்பந்து: ஜேர்மனி சாம்பியன்....
கான்பெடரேஷன் கிண்ணம் கால்பந்து தொடரின் பைனலில் சிலி அணியை வீழ்த்திய ஜேர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ரஷ்யாவில், 10வது ‛பிபா' கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் சிலி, ஜேர்மனி அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதியில் ஜேர்மனி வீரர் லார்ஸ் டின்டில் ( 20வது நிமிடம்) முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இதற்கு சிலி அணியால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை. போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களின் கோல் முயற்சி எதுவும் கைகொடுக்கவில்லை.
முடிவில் ஜேர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
கான்பெடரேசன் கால்பந்து: ஜேர்மனி சாம்பியன்....
Reviewed by Author
on
July 03, 2017
Rating:

No comments:
Post a Comment