அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் எதிரிகள் அல்ல: கிழக்கு முதல்வர்


அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்படாமையால் பல மாகாணங்களில் உள்ள வளங்கள் பயன்படுத்தப்படாமலே அழிந்து போகக்கூடிய நிலைமை உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு தொடர்பில் நாட்டில் உருவாகியுள்ள கருத்தாடல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அதிகாரம் தெற்கு, மேற்கு மத்திய உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்படும். வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் இந்த நாட்டிற்கு எதிரிகள் அல்ல. அவர்களும் இந்த நாட்டை நேசிப்பவர்கள் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதகமான விடயங்கள் உள்ளமையாலேயே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
அதிகாரப் பகிர்வு தொடர்பான தவறான தோற்றப்பாடு நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால் அனைத்து மக்களும் நன்மையடைவார்கள்.
அதிகாரப் பகிர்வின் ஊடாக நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்தவும் நிர்வாகக் கட்டமைப்பைப் பலப்படுத்தவும் முடியும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, பௌத்த பீடங்களின் பிரதம மாநாயக்க தேரர்கள் கூடி அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இல்லாத பிரச்சினையை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தயாரிப்பது ஒரு போதும் சரியானதல்ல எனவும் மஹாநாயக்க தேரர்கள் ஒருமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 
வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் எதிரிகள் அல்ல: கிழக்கு முதல்வர் Reviewed by Author on July 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.