யாழ்.வடமராட்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ரத்து.....
வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பன ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டங்கள், நாளை மறுதினம் திங்கட்கிழமை (10) இடம்பெறவிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 10ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் - 09 மணிக்கும், வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதே தினம் பிற்பகல்- 02 மணிக்கும் இடம்பெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்.வடமராட்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ரத்து.....
Reviewed by Author
on
July 09, 2017
Rating:

No comments:
Post a Comment