137 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை......
அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வீட்டில் 137 வருடங்களாக அவர்களது பரம்பரையில் பெண் குழந்தையே இல்லாத நிலையில், தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
South Carolina - வை சேர்ந்த Carter Louise Settle என்பவரது பரம்பரையில் பெண் குழந்தைகளே கிடையாது. கடந்த 137 ஆண்டுகளாக ஆண் குழந்தைகளே பிறந்துள்ளது.
இவரது அப்பா உட்பட தாத்தா மற்றும் மூதாதையர்களுக்கும் ஆண் குழந்தையே பிறந்துள்ளது.
Settle இதற்கு முன்னர் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருக்கும் ஆண் குழந்தையே பிறந்துள்ளது.
இந்நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு, அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது, இதுகுறித்து Settle கூறியதாவது, எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை என்னால் நம்பமுடியவில்லை, எனது தாய்க்கு பெண் குழந்தை என்றால் கொள்ளை பிரியம், தற்போது இந்த குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார்.
எங்கள் பரம்பரையில் 137 வருடங்களுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளதால், அதனை ஒரு கட் அவுட் அடித்து கொண்டாடியுள்ளோம் என கூறியுள்ளார்.
137 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை......
Reviewed by Author
on
July 09, 2017
Rating:

No comments:
Post a Comment