வறட்சியின் உச்சம்! பாலைவனமாகும் நந்திக்கடல்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியான காலநிலை அதிகரித்துள்ளதால் மாவட்டத்தின் மிகப்பெரிய வாவியாக கருதப்படும் நந்திக்கடல் வற்றி விட்டதாக அப்பகுதி மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வறட்சி உச்சநிலை அடைந்துள்ளதால் 4800க்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சமாசங்களின் தலைவர் மரியதாஸ் அந்தோனிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
நந்திக்கடலில் அதிகமான சேற்று மண் தேங்கி நின்றமையே நீர்வற்றிப் போவதற்கு முக்கிய காரணம் என்று முல்லைத்தீவு கடல் நீரியல் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் நந்திக்கடலை ஆழப்படுத்தி அதிகமான நீரைத்தேக்கி வைப்பதற்குரிய நடவடிக்கைகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நந்திக்கடல் பகுதியில் நீர் குறைந்த காரணத்தினால் அண்மைக்காலமாக அதிகளவிலான மீன்கள் இறந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வறட்சியின் உச்சம்! பாலைவனமாகும் நந்திக்கடல்...
Reviewed by Author
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment