அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பெனிலின் "ஈரா நிலத்தை எதிர்பார்த்து" கவி நூல் அறிமுக விழா.....


மன்னார் மண்ணில் வாழும் மாற்றுத்திறன் படைத்த மன்னார் பெனிலின் கவி நூல் அறிமுக விழா
மன்னார் பெனில் அவர்கள் முள்ளந்தண்டு வடம் காயப்பட்டு நெஞ்சு பகுத்திக்கு கீழே உணர்விழந்தவராய் சக்கர நாற்காலியின் உதவியுடன் வாழ்கின்றார்.
பல்வேறு இன்னல் துன்பங்கள் வந்தாலும் மனம் தளராது வாழும் இவர் இலக்கியத்தை பெரிதும் நேசிப்பவராக இருப்பதோடு இலக்கிய பரப்புக்கு இரண்டு கவிதை தொகுப்புக்களை தந்துள்ளார்.

அவரது இரண்டாவது கவிதை தொகுப்பான "ஈரா நிலத்தை எதிர்பார்த்து" என்ற கவிதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பாக புன்னகை அமைப்பு மற்றும் வன்னிப் பட்டறை இணைந்து அறிமுகம் செய்ய உள்ளார்கள்.

வவுனியா கொரோவப்பொத்தான வீதியில் இருக்கும் அருந்ததி மண்டபத்தில் 2017.07.08 மாலை 3.00 மணிக்கு அறிமுக விழா நடைபெற இருக்கின்றது.

இந்த அறிமுக விழா சிறப்பாக நடைபெறவும் மன்னார் பெனில் அவர்களின் இலக்கியப் பயணம் மேலும் சிறப்பாக அமையவேண்டும் என்று நீயூமன்னார்  இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
 தொடர்பு கொள்ளவும் .0779689972
 










மன்னார் பெனிலின் "ஈரா நிலத்தை எதிர்பார்த்து" கவி நூல் அறிமுக விழா..... Reviewed by Author on July 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.