முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு....
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச சபையின் புதிய கட்டிடத்தொகுதியினை வடமாகாண சபையின் மகளிர் விவகாரம் அமைச்சர் அனந்தி சசிதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் பா. சிவபாலராசா தலைமையில் 04-07-2017 காலை 10.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்படுத்தும் நிதியின் கீழ் 17.711 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாந்தை கிழக்குப் பிதேச சபைக்கான புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு வைபரீதியாக புதிய கட்டிடத்தினை திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அவரின் சார்பாக புதிய அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்துள்ளார்.
இதேவேளை இணைய வழி நூலக சேவையும் வடமாகாண சபையின் மகளிர் விவகாரம் சமூக சேவைகள் புனர்நிர்மாண அமைச்சர் அனந்தி சசிதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், க. சிவநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், கமலேஸ்வரன் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை, அதிபர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு....
Reviewed by Author
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment