கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல்...
கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017ம் ஆண்டின் வாழ்வாதார உதவித் திட்டங்கள் பெறும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் தலைமையில் A9 வீதியில் அமைந்துள்ள பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இந்த வருடம் 5 மாவட்டங்களிலும் இருந்து ஒரு மாவட்டத்திற்கு 60 பயனாளிகள் வீதம் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு தலா 50,000 ரூபா வீதம் அவர்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் வகையில் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 60 பயனாளிகள் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மூலமாக வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு சரியான திட்டத்தினை தெரிவு செய்வது சம்பந்தமாக நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன.
இதில் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் பணிப்புரைக்கு அமைவாக, பயனாளிகள் தாம் தெரிவு செய்யும் திட்டங்கள் அவர்களது தொழில் சார்ந்த உதவிகளாக இருப்பின் அது மிகுந்த பலனளிக்கும்.
அத்துடன், முன் அனுபவம் இல்லாத புதிய திட்டங்களை தெரிவு செய்யும் போது அதன் பலன் மிக குறைவாகவே காணப்படும் என தெளிவுபடுத்தப்பட்டனர்.
மேலும், பயனாளிகள் இதன்மூலம் பெறப்படும் வருவாயில் தங்களது பிள்ளைகளுக்கு இயலுமான வரையில் கல்வியூட்ட வேண்டும் எனவும் அதுவே எமது நிரந்தர வருமானம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல்...
Reviewed by Author
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment