மன்னார் மாவட்டத்தின் புதிய நகரசபை அலுவலக கட்டிடம் திறப்புவிழா
மன்னார் மாவட்டத்தின் புதிய நகரசபை அலுவலக கட்டிடம் திறப்புவிழா இன்று 04-07-2017 உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக
- வடமாகண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன்
- (மாண்புமிகு முதலைச்சர் அவ்ர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்)
- வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
- வடமாகாண மீன்பிடி அமைச்சர் ப.டெனிஸ்வரன்
- வடமாகாண உறுப்பினர்களான
- DR.G.குணசீலன்
- LLB.S.பிறிமூஸ்சிராய்வா
- மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்டிமெல்
விருந்தினர்களை மன்.புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் இன்னியம் முழங்க மன்னார் நகரசபையின் செயலாளர் X.L.பிரிட்டோ தலைமையில் சந்தனமாலைகள் அணிவித்து வரவேற்கபட்டதோடு பாரம்பரிய நிகழ்வாக குத்துவிளக்கேற்றல் தொடர்ந்து சமயத்தலைவர்களின் ஆசியுரையோடு நிகழ்வுகள் ஆரம்பமானது.
மன்னார் மாவட்டத்திற்கு மிகவும் அழகான இரண்டு அரச கட்டிடங்கள் தற்போது கிடைத்துள்ளது ஒன்று மன்னார் மாவட்ட செயலகம் மற்றது நகரசபைச்செயலகம் ஆகும்.விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக....
கட்டிடங்கள் எவ்வளவு பெரிதோ சிறிதோ புதிதோ அது முக்கியமில்லை மக்களுக்கான சேவையினை மனநிறைவாக சலிப்பற்ற முறையில் உடனுக்குடன் சேவையாற்றுதல் தான் சிறப்பானது. இதுவரை நாம் எப்படி இருந்தோம் என்பதையுணர்ந்தவர்களாக எமது மக்களின் முன்னேற்றத்தின் அபிவிருத்தியின் வெளிப்பாடாய் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்றவேண்டிய வர்களாய் உள்ளோம் ஒற்;றுமையும் கடமையுணர்வும் எமது இனத்தின் சுவிட்சமான வாழ்வுக்கு வழியமைக்கும் என்பது திண்ணம்.
வடமாகாணதிற்கு நெல்சிப்திட்டத்தின்(உலகவங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் நிதியுதவியுடன்) கீழ் இம்முறை 666 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது மன்னார் மாவட்டத்திற்கு பூரகாவும் 127மில்லியன் ரூபா நிதியில் மன்னார் நகரசபைக்கு 20மில்லியன் ரூபாவும் வடமாகாண அமைச்சின் நிதியில் இருந்து 15மில்லியன் ரூபாவும் சேர்த்து 35 மில்லியன் ரூபா நிதியில் பொறியியலாளர் தேவனந்தா அவர்களின் வடிவமைப்பில் புதிதாய் தோற்றம் பெற்றுள்ளது மன்னார் நகரசபைக்கட்டிட அலுவலகம்.
கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நினைவுச்சின்னம்கள் வழங்கி வைக்கப்பட்டது.
-VMK-


மன்னார் மாவட்டத்தின் புதிய நகரசபை அலுவலக கட்டிடம் திறப்புவிழா
Reviewed by Author
on
July 04, 2017
Rating:

No comments:
Post a Comment