புதிய அரசியலமைப்பு தேவை இல்லை! - மாநாயக்க தேரர்கள் அதிரடி முடிபு
புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையில்லை என நாட்டிலுள்ள மூன்று பெளத்தமத பீடங்களுக் கான மாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளதுடன் அது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தெரிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சிங்கள-பௌத்த மக்களின் பெரும் மதி ப்பிற்கும் வணக்கத்துக்கும் உரிய 3 பௌத்த தலைமைப் பீடங்களான சிவம் நிகாய, அமர புர நிகாய, ராமன்ய நிகாய ஆகியவற்றைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களே மேற்படி முடிவை அதிரடியாக அறிவித்துள்ளனர்.
கண்டியிலுள்ள அஸ்கிரிய பீடத்தின் ஸ்ரீ சந்திரானந்த ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று கூடிய 3 பீடங்களின் பீடாதிபதிகள் உள்ளிட்ட 75 பௌத்த மகா சங்கத்தினரே தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பில் விவாதித்து இத் தீர்மானத்தை ஒருமித்து எடுத்துள்ளனர்.
இம் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகையில், முதலாவதாக தற்போதுள்ள அரசியல மைப்பை அவ்வாறே தொடர்ந்து பேணுவது பொருத்தமானது எனவும் புதிய அரசியலமை ப்பு தேவையில்லை எனவும் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அடுத்து தனியார் மருத்துவ கல்லூரியான சைட்டம் பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காணவேண்டும்.
சிங்கள-பௌத்த மக்களுக்கு நாட்டில் ஏற்பட்டுவரும் அச்சம் மற்றும் அநீதி இழைப்பு தொடர்பில் விசேட கவனம் எடுக்க வேண்டும்.
அதேபோல் இன, மத முறுகல் நிலை தீர்க் கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சர்வதேச தரத்திலான சட்டம் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் அச் சட்டத்தை ஒத்திவைக்க அரசிடம் வலியுறுத்தல் ஆகிய தீர்மானங்களை பௌத்த மகா சங்கத்தினர்; கூட்டாக எடுத்துள்ளனர்.
மேலும் மேற்படி தீர்மானங்களை அமு லாக்கம் செய்வதற்காக நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
சிங்கள-பௌத்த மக்களின் பெரும் மதி ப்பிற்கும் வணக்கத்துக்கும் உரிய 3 பௌத்த தலைமைப் பீடங்களான சிவம் நிகாய, அமர புர நிகாய, ராமன்ய நிகாய ஆகியவற்றைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களே மேற்படி முடிவை அதிரடியாக அறிவித்துள்ளனர்.
கண்டியிலுள்ள அஸ்கிரிய பீடத்தின் ஸ்ரீ சந்திரானந்த ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று கூடிய 3 பீடங்களின் பீடாதிபதிகள் உள்ளிட்ட 75 பௌத்த மகா சங்கத்தினரே தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பில் விவாதித்து இத் தீர்மானத்தை ஒருமித்து எடுத்துள்ளனர்.

சிங்கள-பௌத்த மக்களுக்கு நாட்டில் ஏற்பட்டுவரும் அச்சம் மற்றும் அநீதி இழைப்பு தொடர்பில் விசேட கவனம் எடுக்க வேண்டும்.
அதேபோல் இன, மத முறுகல் நிலை தீர்க் கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சர்வதேச தரத்திலான சட்டம் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் அச் சட்டத்தை ஒத்திவைக்க அரசிடம் வலியுறுத்தல் ஆகிய தீர்மானங்களை பௌத்த மகா சங்கத்தினர்; கூட்டாக எடுத்துள்ளனர்.
மேலும் மேற்படி தீர்மானங்களை அமு லாக்கம் செய்வதற்காக நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
புதிய அரசியலமைப்பு தேவை இல்லை! - மாநாயக்க தேரர்கள் அதிரடி முடிபு
Reviewed by NEWMANNAR
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment