சமஸ்டி தீர்வை அரசாங்கம் மறுத்தால் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்: செல்வம் அடைக்கலநாதன்
அரசாங்கம் இணைந்த வட கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வை தர மறுக்குமாயிருந்தால் நாங்கள் பிரிந்து வாழுகின்ற சந்தர்பத்தை தரவேண்டும் என சர்வதேசத்திடம் நியாயம் கேட்போம்.
அதேவேளை இனைந்த வடகிழக்கை பிரிப்பதற்கு எந்த கொம்பனாலும் நினைத்து பார்க்க முடியாது அதனை செய்வதற்கு அனுமதிக்க முடியாது வடகிழக்கு இணைக்கப்படவேண்டும் சமஷ்டி முறையிலான தீர்வு கிடைக்கவேண்டும் இது தான் எங்களுடைய கொள்கையாகும் என நாடாளுமன்ற குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வெலிக்கடைச் சிறையில் 1983 ம் ஆண்டு யூலை படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் உட்டபட படுகொலை செய்யப்பட்ட 53 அரசியல் கைதிகள் மற்றும் பொதுமக்களின் 34 வது ஆண்டு தியாகிகள் நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் தேவாலய மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது இதில் அதிதியாக கலந்துகொண்ட நாடாளுமன்ற குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார் .
இந்த நாட்டிலே அகிம்சை போராட்டம் தோள்விகண்ட நிலையில் தான் இந்த ஆயுதபோராட்டத்தை முன்னெடுப்பதற்காக முதல் முதலாக களமிறங்கியவர்கள் எங்களுடைய தவைர்களான தலைவர் தங்கத்துரை தளபதி குட்டிமணி அவோருடு இணைந்த போராளி ஜெகன் போன்றவவர்கள் ஆயுதத்தின் ஊடாகத்தான் இதை வெல்லமுடியும் என நினைத்த காரணத்தினால் தான் ஆயதப்போராட்டம் முளைத்த வரலாற்றை இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்
இந்த வீரம் செறிந்த பல வரலாறுகளை படைத்த அந்;த சண்டையிலே கூடுதலான பங்களிப்பை செய்தது கிழக்கு மாகாண என்பதை பெருமையோடு செல்லுகின்றேன் அதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாட்டை செய்தது இந்த மட்டக்களப்பு மாநகரம் என்பதை குறிப்பிடுகின்றேன்.
கிழக்கு மாகாணம் என்பது எங்களுடைய ஈழபோராட்டத்திலே பங்களிப்பை பெரியளவிலே செய்திருக்கின்றது இதேவேளை வடக்கு கிழக்கிலே இரத்தததை சிந்திய அந்த இளைஞர்களுடைய வீரம் இன்று கொச்சைப்படுத்தப்படுகின்றது
ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் அகிம்சை போராட்டமாக இருக்கலாம் அவைகள் உச்சக்கட்டத்தை அடைந்ததே தவிர அது வெற்றி பெற்ற வரலாறு இல்லை அது ஏன் என்றால் எங்களுக்குள்ளேயே எட்டப்பன்கள் கூட இருந்ததால்
இன்று ஆயதப்போராட்டத்தின் பலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலையில் போடப்பட்டுள்ளது எங்கள் மக்களின் எதிர்கால மக்களின் வாழ்வை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய இந்த மண்ணிலே மக்களின் எதிர்கால வாழ்கையை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக இருக்கவேண்டும் இந்த ஒற்றுமை வலுப்பெறவேண்டும் என நாங்கள் விடுதலைப் புலிகளை நாடினோம்.
சமஸ்டி தீர்வை அரசாங்கம் மறுத்தால் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்: செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment