தீக்கிரையானது சிரியா அகதிகள் முகாம்.....
சிரியாவில் உள்நாட்டு யுத்தம் காரணமாக வெளியேறிய அந்த நாட்டு மக்கள் தங்கியிருந்த அகதிகள் முகாம் மொத்தமும் தீ விபத்தில் சாம்பலாகியுள்ளது.
குறித்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுள்ளதாகவும் 6 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவல் தெரிய வந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் கடுமையாக போராடியும் நெருப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி தகிக்கும் கால நிலையும் நெருப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு ஒரு காரணம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
மின் இணைப்புகளில் ஏற்பட்ட அதிக அழுத்தமே குறித்த தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. சமையல் எரிவாயு உருளைகள் வெடிக்கும் சத்தம் தொலை தூரத்திலும் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் சுமார் 100 கூடாரங்களுக்கு மேல் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. விபத்து காரணமாக சுமார் 700 பேர் கொண்ட 97 குடும்பங்களுக்கு தற்போது விடில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக லெபனான் செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தீக்கிரையானது சிரியா அகதிகள் முகாம்.....
Reviewed by Author
on
July 03, 2017
Rating:

No comments:
Post a Comment