வவுனியாவில் பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பம்...
வவுனியா பொலிசாரினால் பொலிஸ் நடமாடும் சேவை நிலையமொன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, இன்றைய தினம் காத்தார்சின்னகுளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள அண்ணாநகர் கிராமத்தில் கோவில் பிரார்த்தனைகளின் பின்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தினை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார திறந்து வைத்துள்ளார்.
குறித்த நடமாடும் சேவை நிலையத்தின் செயற்பாடுகள் இன்று (23) தொடக்கம் எதிர்வரும் ஆவணி மாதம் (23) வரை சுமார் ஒரு மாத காலம் செயற்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன் மூலம் பிரதேசத்தின் புத்திஜீவிகள் மற்றும் பொது மக்களினால் முன்வைக்கப்படும் பிரதேசத்தின் அபிவிருத்திப்பணிகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக அடையாளங்காணப்பட்டு அவற்றினை நிறைவேற்றி பொது மக்கள் நலன்சார்ந்த பணிகனை முன்னெடுக்கவுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிட்னி பாதிக்கப்பட்டு வசதியற்ற k.கமலநாதன் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்காக அடிகல்நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதுள்ள அம்மாவிற்கு முச்சக்கர நாற்காலி வழங்கியும் வைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்கு பரிசு பொருட்களும், கண் பார்வை குறைவுற்றோருக்கான கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சோமரத்ன விஜயமுனி, பிரதேசத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்க தலைவர் கே.ராஜலிங்கம், கிராம சேவகர்கள், மத தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பொலிஸ் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
வவுனியாவில் பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பம்...
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment