200 கற்கள் பெண்ணின் பித்தப்பையில் இதை தவிர்த்ததால் வந்த விபரீதம்.....
சீனாவில் பெண்ணின் பித்தப்பையில் இருந்த 200 கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சீனாவின் ஹெய்சுவி பகுதியைச் சேர்ந்தவர் குவன்ஜி. இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணின் பித்தப்பையில் கற்கள் உள்ளதை அறிந்துள்ளனர்.
இதனால் அவர்கள் கற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கற்களின் எண்ணிக்கையைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன் பின் பித்தப்பையிலிருந்து 200 கற்களை மருத்துவர்கள் அகற்றினர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்ததுதான், கற்கள் உருவாகக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் மருத்துவர்கள் கூறுகையில், தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை. இதனால் கற்கள் மட்டுமல்ல, இதுபோன்ற பல்வேறு உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
200 கற்கள் பெண்ணின் பித்தப்பையில் இதை தவிர்த்ததால் வந்த விபரீதம்.....
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment