1000 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட கோவில்: எங்கு உள்ளது?
ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீரில் உள்ள சோனிஜி கி நசியான் எனும் ஒரு புனித தலம் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
இது ராஜஸ்தானின் பெருமைமிக்க கட்டிடக் கலை சிறப்புகளுள் ஒன்றானதாகும்.
சிறப்புகள் என்ன?
இதில் உள்ள சிறப்பே கோல்டன் சாம்பர் எனப்படும் தங்க அறை தான். இந்த அறையினுள் கோட்டை முதல் மாளிகைகள் வரை அனைத்துமே தங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த கோயிலின் முதல் தளம் தங்க நகரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலினுள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன உருவங்கள், தளங்கள், வேலைப்பாடுகள் என்று மொத்தம் 1000 கிலோ அளவுக்கு தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு பழைமையான அயோத்யாவின் உருவங்களை செதுக்கி தங்கத்தால் இழைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலை கட்டி அஜ்மீரின் சோனி குடும்பத்தின் சந்ததிகளின் கட்டுப்பாட்டில் இன்றளவு இருந்து வருகிறது. சமணர்களின் கண்ணோட்டத்தில் அவர்களின் முறைகளில் உலக வரைபடம் எப்படி இருக்கும் என்பது தான் இந்த படம்.
இந்த கோவில் சமண மதத்தின் பல்வேறு கொள்கைகளையும், சிறப்புக்களையும் விளக்கும் வண்ணம் கண்ணாடி வகைகளால் செய்யப்பட்ட பொருள்களையும் கொண்டுள்ளது. சிவப்பு கற்களால் கட்டப்பட்டதால், இது சிவப்பு கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
1000 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட கோவில்: எங்கு உள்ளது?
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment