ஐ.எஸ் படைகளின் கடைசி நகரும் வீழ்ந்தது: முன்னேறும் சிரிய ராணுவம்...
ஐஎஸ் படைகளை சுற்றி வளைத்தது சிரியாவின் ராணுவம் என்ற தகவலை சிரிய மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஹோம்ஸ் எனும் முக்கிய நகரத்தை ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்குப் பகுதிகள் நோக்கி ராணுவம் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
பால்மைரா எனும் பழங்கால நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்திலுள்ள அல் சுக்னா எனும் பகுதியை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியிருந்தது.
அதன் அருகில் இன்னும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் முழுக்கட்டுப்பாட்டிலுள்ள டீயர் அல்-சோர் எனும் மாகாணம் உள்ளது. மட்டுமின்றி சுக்னாவின் முக்கிய பகுதிகளை ரணுவம் சுற்றி வளைத்துள்ளது என்று சிரிய அரசு செய்தி நிறுவனமான சானா தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றினால் சிரியா போரில் முழுமையாக வெற்றி பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.
சிரிய படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் செயல்பட்டு வருகிறது. அதேபோன்று குர்து படைகளுக்கு ஆதராவக அமெரிக்க ராணுவம் பக்கபலமாக உள்ளது.
ரஷ்ய ஆதரவு சிரிய படைகளும் ஈரான் ஆதரவு போராளிகளும் ஐ.எஸ் படைகளுக்கு கடும் நெருக்கடி வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
ஒருபக்கம் ரக்கா நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் அமெரிக்க படைகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ் படைகளின் கடைசி நகரும் வீழ்ந்தது: முன்னேறும் சிரிய ராணுவம்...
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment