106 ஆண்டுகள் பழமையான 'கேக்' கண்டெடுப்பு! பழுதடையாமல் இருக்கும் அதிசயம்...
அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர்.
அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது.
இந்த பழமையான கேக், பிரிட்டனை சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
இந்த பழமையான கட்டடம் 1899ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1911ஆம் ஆண்டு தனது டெர்ரா நோவா ஆய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கட்டிடத்தில் தங்கியுள்ளார்.
இந்த கேக் வைக்கப்பட்டிருந்த பெட்டி துருப்பிடித்திருந்த போதிலும், கேக் பழுதடையாமல் உண்பதற்குரிய வாசத்துடன் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டனைச் சேர்ந்த பிஸ்கட் நிறுவனமான ஹன்ட்லே & பால்மர்ஸ் இந்த கேக்கை தயாரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்று அந்த கட்டிடத்தில் பழமையான கருவிகள், உடைகள், அழுகிப்போன மீன் மற்றும் இறைச்சி போன்ற 1,500 பொருட்கள் பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
106 ஆண்டுகள் பழமையான 'கேக்' கண்டெடுப்பு! பழுதடையாமல் இருக்கும் அதிசயம்...
Reviewed by Author
on
August 14, 2017
Rating:

No comments:
Post a Comment