உயிரிழந்தார் உலகின் மூத்த மனிதர்.....
உலகின் மூத்த மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இஸ்ரேல் கிறிஸ்டல் தன்னுடைய 113வது வயதில் உயிரிழந்துள்ளார்.
1903-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் திகதி யூத குடும்பத்தில் பிறந்த கிறிஸ்டல், 114-வது பிறந்தநாளை கொண்டாட இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் ஹாய்பா நகரின் ஜர்னோவ் பகுதியில் கிறிஸ்டல் வசித்து வந்தார்.
தனது 17-வது வயதில் போலாந்து நாட்டின் லாட்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்த அவர், அங்கு திருமணம் முடித்து சாக்லேட் தொழிற்சாலை ஒன்றினை நடத்தி வந்தார்.
உலகப்போரின் போது நாஜிப்படைகளால் கைது செய்யப்பட்ட கிறிஸ்டலும், அவரதுமனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாஜிப்படைகளால் சித்தரவதை செய்யப்பட்ட கிறிஸ்டலின் மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நாஜி படைகளின் கொடுமையால் 39 கிலோ எடைவரை உடல்மெலிந்த கிறிஸ்டல் ரஷ்ய படைகளால் மீட்கப்பட்டு உயிருடன் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, சில வருடங்களுக்கு பிறகு இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு இஸ்ரேல் நாட்டின் ஹாய்பாவிற்கு திரும்பினார்.
இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகளும், 9 பேரன்கள் மற்றும் 32 கொள்ளு பேரன்களும் உள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகின் மூத்த மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார் கிறிஸ்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தார் உலகின் மூத்த மனிதர்.....
Reviewed by Author
on
August 12, 2017
Rating:

No comments:
Post a Comment