யாழில் இடம்பெற்ற உலக சைவ இளைஞர் மாநாட்டின் 2 நாள் நிகழ்வுகள்........
அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று யாழில் ஆரம்பமாகிய உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
அகில இலங்கை சைவ மகா சபையின் அமைப்பாளர் ப.நந்தகுமார் தலைமையில் இன்று காலை யாழ். நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இரண்டாம் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
இதன் போது மாநாட்டின் இருநாள் நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்த தமிழக பேரூர் ஆதீன இளைய பட்டம் தவத்திரு மருத்தாச்சலம் அடிகளார் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தம் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
தமிழ் எங்கள் மொழி... சைவம் எங்கள் வழி எனும் மகுடவாக்குடனும், சைவத்தமிழ் மறுமலர்ச்சியில் இளைஞர்களின் பங்கும் பணியும் எனும் தொனிப் பொருளிலும் இந்த மாநாடு யாழில் எழுச்சியுடன் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

=========================================
யாழில் இடம்பெற்ற உலக சைவ இளைஞர் மாநாட்டின் 2 நாள் நிகழ்வுகள்........
Reviewed by Author
on
August 12, 2017
Rating:

No comments:
Post a Comment