மென்சா அறிவுத்திறன் போட்டியில் 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்த இந்திய வம்சாவளி மாணவன்,
லண்டன் நகரில் நடைபெற்ற ‘மென்ஸா ஐ.கியூ.’ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் 162 புள்ளிகளை பெற்று அறிவுக்கூர்மையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மனிதர்களின் பொது அறிவுத் திறனை மதிப்பிடும் உலகின் மிகப் பழமையான ‘மென்ஸா’ நிறுவனம் நடத்திய அறிவுக்கூர்மை (ஐ.கியூ.) போட்டியில் பங்கேற்ற லிடியா செபாஸ்டியன் என்ற 13 வயது சிறுவன் 150 நிமிடங்கள் நடைபெற்ற பொதுஅறிவு தொடர்பான தேர்வில், தனக்கு அளிக்கப்பட்ட மிகக் கடினமான கேள்விகளுக்கு வெகு சுலபமாக பதில் அளித்து 162 ஐ.கியூ. புள்ளிகளுடன் முதல் இடத்தில் வந்துள்ளார்.
பொதுஅறிவு தொடர்பான 150 கேள்விகளுக்கு அசத்தாலாக பதிலளித்து, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரு மதிப்பெண்கள் அதிகம் பெற்று அவர்களை விட அறிவு திறன் பெற்றவன் என்ற சாதனையை தற்போது படைத்துள்ள துருவ் கார்க், தென்கிழக்கு லண்டனில் உள்ள வோக்கிங்ஹாம் பகுதியில் வசித்துவரும் இந்திய வம்சாவளி தம்பதியரின் மகனாவார்.
கலாசாரம் தொடர்பான மற்றொரு பொதுஅறிவு திறன் போட்டியிலும் அதிகபட்ச மதிப்பெண்ணான 152 மதிப்பெண்களையும் இவர் முழுமையாக பெற்றுள்ளார். இதன்மூலம், உலகில் வாழும் ஒரு சதவீதம் அறிவுக்கூர்மை படைத்தவர்கள் பட்டியலில் தற்போது துருவ் கார்க் இணைந்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் துருவ் கார்க், கோடைக்கால விடுமுறைக்காலம் என்பதால் இந்த போட்டியில் நான் கலந்து கொண்டேன். இவ்வளவு அபாரமான மதிப்பெண்களை பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
பெர்க்ஷய்ர் நகரின் அருகாமையில் இருக்கும் ரெடிங் பகுதியில் உள்ள பள்ளியில் ஆங்கில இலக்கணத்தை சிறப்புப் பாடமாக தேர்வு செய்து பயின்றுவரும் துருவ் கார்க், ‘ரூபிக் கியூப்’ கனசதுர விளையாட்டை 100 வினாடிகளில் முடித்து விடக்கூடியவராகவும் உள்ளார். தனிமையில் வாழ்ந்து வருபவர்கள் தாங்கள் வசிக்கும் சுற்றுப்புறப் பகுதியில் தங்களைப்போல் தனியாக வாழ்பவர்களை தொடர்பு கொண்டு சந்திக்கும் வகையில் புதிய ‘ஆப்’ ஒன்றையும் உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மென்சா அறிவுத்திறன் போட்டியில் 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்த இந்திய வம்சாவளி மாணவன்,
Reviewed by Author
on
August 29, 2017
Rating:

No comments:
Post a Comment