30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா படம்....பாலஸ்தீனம் காஷாவில்
பாலஸ்தீனத்தில் உள்ள காஷா நகரம் கடந்த 30 ஆண்டுகளாக ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக அங்கு சினிமா காட்சிகள் திரையிடப் படாமல் நிறுத்தப்பட்டன. காஷா பகுதியில் 20 லட்சம் பொதுமக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் இன்றி பொழுதை கழித்து வந்தனர்.
இந்த நிலையில் அங்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சினிமா படம் திரையிடப்பட்டது. அங்குள்ள பழமை வாய்ந்த சமீர் தியேட்டரில் திரையிடப்பட்டது.
அது பொழுதுபோக்கு படம் அல்ல. இஸ்ரேல் சிறைகளில் பாஸ்தீனியர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வலியுறுத்தும் ஆவண படமாகும். இருந்தாலும் அப்படத்தை காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று பார்த்தனர்.
இந்த ஆவணப்படத்தை நேற்று முன்தினம் ஒருநாள் இரவு மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது. ஆனால் சினிமா படம் தொடர்ந்து திரையிடப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா படம்....பாலஸ்தீனம் காஷாவில்
Reviewed by Author
on
August 29, 2017
Rating:

No comments:
Post a Comment