20வது திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் பெரும் ஆபத்தானது! கபே எச்சரிக்கை....
நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ள உத்தேசித்துள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் பெரும் ஆபத்து என்று கபே அமைப்பு எச்சரித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்புகளின் ஒன்றியம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போது கபே அமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி ஒருவரின் பதவித் தவணைகளை வரையறை செய்வதை ரத்துச் செய்த 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இருந்த ஜனநாயகத்துக்கு ஆபத்தான பண்புகள் காரணமாக அதனை இந்த அரசாங்கம் முற்றாக நீக்கியுள்ளது.
எனினும் அதனை விட பயங்கரமான ஆபத்துக்களைக் கொண்டுள்ள 20வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள இந்த அரசாங்கம் பெரும் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டால் எதிர்வரும் 2019ம் ஆண்டு ஒக்டோபர் வரை மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடைக்கும்.
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் சாக்கில் அரசாங்கம் அதனை நியாயப்படுத்த முயற்சிக்கும்.
அந்த வகையில் அரசாங்கத்தின் 20வது திருத்தச் சட்டமானது ரத்துச் செய்யப்பட்ட 18வது திருத்தச் சட்டத்தை விடவும் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் பெரும் ஆபத்தானது என்றும் கீர்த்தி தென்னக்கோன் தொடர்ந்தும் எச்சரித்துள்ளார்.
20வது திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் பெரும் ஆபத்தானது! கபே எச்சரிக்கை....
Reviewed by Author
on
August 07, 2017
Rating:

No comments:
Post a Comment