மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் கிளையினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.(படம்)
நல்லாட்சி அரசின் இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குற்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு இன்று திங்கட்கிழமை(21) மாலை மன்னார் அலுவலகத்தில் வைத்து உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமியூ முகம்மது பஸ்மி தலைமையில் இடம் பெற்ற குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 200 வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் வைத்து வைபவ ரீதியாக குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
-ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள்,கட்சியின் மகளிர் கிளை பிரதி நிதிகள் மற்றும் ஏனைய பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் கிளையினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.(படம்)
Reviewed by Author
on
August 22, 2017
Rating:

No comments:
Post a Comment