நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள்!
நயினாதீவு - நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள் இரண்டும் தெரியும் படியாக உள்ளது.
குறித்த அதிசயம் கிளிநொச்சி - மருதநகரில் உள்ள சின்னப்பு, பொன்னம்மா அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயை வீட்டில் சுவாமி அறையில் எடுத்து வைத்த போது உடைத்த தேங்காயில் அம்மனின் கண்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் வியந்து போயுள்ளார்கள்.
கிளிநொச்சி - பரவிப்பாஞ்சான் வழியில் மருதநகர் பிள்ளையார் கோவில் முன்பாகவுள்ள வீதிக்கு அருகிலேயே சின்னப்பு, பொன்னம்மாவின் வீடு உள்ளது.
முன்னதாக இந்த வீட்டில் ஆதி வைரவர் ஆலயமும், அம்மனும் ஆலயமும் சிறிதாக அமையப்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டள்ளது.
நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள்!
Reviewed by Author
on
August 22, 2017
Rating:

No comments:
Post a Comment