30 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு....
வவுனியா - தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடு சந்தியை இணைக்கும் ஔவையார் வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், வவுனியா பிரதேச செயலம் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், மற்றும் வவுனியா நகரசபையினரின் அனுமதியுடனும், மக்களின் பங்களிப்புடனும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த முப்பது வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் சுமார் இரண்டு கிலோ மீற்றர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதிலும், தெற்கிலுப்பைக்குளம் மற்றும் கோவில்குளம் கிராம மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக இந்த பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
30 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு....
Reviewed by Author
on
August 01, 2017
Rating:

No comments:
Post a Comment