அண்மைய செய்திகள்

recent
-

48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி: நெஞ்சை அதிரச் செய்யும் சம்பவம்!


உத்தரபிரதேச மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குறைப்பாட்டால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையிலேயே இத்துயர சம்பவம் நடந்துள்ளது.

இங்கு மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் செயல்பாடு பிரச்னை காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டை உலுக்கிய இச்சம்பவத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே புதிதாக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை பெருமளவு குறைத்துள்ளதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி: நெஞ்சை அதிரச் செய்யும் சம்பவம்! Reviewed by Author on August 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.