50 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் குத்துச்சண்டை வீரர் மேவெதர் உலக சாதனை.
தொழில்முறை குத்துச் சண்டை ஜாம்பவான்களான புளோயிட் மேவெதர் (அமெரிக்கா) கனோர் மெக்கிரிகோர் (அயர்லாந்து) மோதிய மெகா குத்துச்சண்டை போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை நடந்தது.
பிரபலமான இரு வீரர்கள் மோதிய ஆட்டம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஒரு டிக்கெட் ரூ. 32 ஆயிரம் முதல் ரூ. 6½ லட்சம் வரை விற்கப்பட்டது.
இந்த போட்டி மூலம் ரூ. 4230 கோடி வருவாய் கிடைக்கும் என்று கணக் கிடப்பட்டது.
12 சுற்று கொண்ட அப்போட்டில் இருவரும் ஆக்ரோஷமாக மோதினர். மாறி மாறி சரமாரியாக குத்துக்களைவிட்டனர். ஆனால் மேவெதரின் சாமர்த்தியமாக ஆட்டத்துக்கு மெக்கிரிகோர் ஈடு கொடுக்க முடியவில்லை. 10-வது சுற்றில் மெக்கிரி கோரை மேவெதர் டெக்னிக்கல் நாக் அவுட் செய்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேவெதர் இதுவரை தோல்வியே சந்திக்காத வீரராக வலம் வருகிறார். தான் மோதிய 50 போட்டியிலும் வெற்றி பெற்று உள்ளார். இதில் 27 பேரை நாக்அவுட் செய்துள்ளார்.
50 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் குத்துச்சண்டை வீரர் மேவெதர் உலக சாதனை.
Reviewed by Author
on
August 28, 2017
Rating:

No comments:
Post a Comment