வடக்கில் 6000 பொருத்து வீடுகள்! கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி சுவாமிநாதன் நடவடிக்கை...
வடக்கு மாகாணத்தில் 6000 பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கைஎடுத்துள்ளதாக தெரியவருகிறது.
வடமாகாணத்திற்கு பொருத்து வீடுகளை வழங்க மத்திய மீள்குடியேற்ற அமைச்சர்டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்புவடபகுதிக்கு அது பொருத்தமில்லை எனத் தெரிவித்து அதனை எதிர்த்திருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் வழக்குதாக்கல் செய்தும் உள்ளார். வடக்கு மாகாண சபையும் பொருத்து வீட்டினை எதிர்த்துவருகின்றது.
இந்நிலையில், வடக்கில் 6000 பொருத்து வீடுகளை வழங்க மத்திய மீள்குடியேற்றஅமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன்படி அவ் வீட்டு பயனாளிகள் தெரிவுகள்ஐக்கிய தேசிய கட்சி மாவட்ட மட்ட தலைவர்களால் தெரிவு செய்யப்பட்டு மத்தியமீள்குடியேற்ற அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியால்மாவட்ட மட்டத்தில் செயற்படும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஒரு தொகைவீடுகளுக்குரிய பயனாளிகளை தெரிவு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அரசியல்வாதிகளின் தெரிவின் அடிப்படையில் மாவட்ட, பிரதேசசெயலகங்களுடன் நேரடி தொடர்புபடாத வகையில் பொருத்து வீட்டினை நடைமுறைப்படுத்தஅமைச்சர் சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கட்சி ஆதரவாளர்களுக்குஇதன்போது முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

வடக்கில் 6000 பொருத்து வீடுகள்! கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி சுவாமிநாதன் நடவடிக்கை...
Reviewed by Author
on
August 07, 2017
Rating:

No comments:
Post a Comment