திறந்தவெளி தேசமான கத்தார்! அமெரிக்கா, பிரித்தானியா உட்பட 80 நாட்டு மக்களுக்கு இலவச அனுமதி....
80 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் விசா இல்லாமல் கத்தாருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அந்நாட்டு உள்துறை உத்தரவின்படி இது உடனடியாக அமலுக்கு வருகிறது என கத்தார் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளது.
கத்தார் நாட்டுக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கத்தாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகை தரும் பயணிகளின் நாட்டை பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறையானது 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் மாறுபடுகிறது என குறி்ப்பிடப்பட்டுள்ளது.
திறந்தவெளி தேசமான கத்தார்! அமெரிக்கா, பிரித்தானியா உட்பட 80 நாட்டு மக்களுக்கு இலவச அனுமதி....
Reviewed by Author
on
August 10, 2017
Rating:

No comments:
Post a Comment