தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இந்தியா சாதனை....
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்று இந்திய அணி இங்கிலாந்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 9 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.
தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இந்தியா சாதனை
இந்திய டெஸ்ட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விராட் கோலி இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக பொறுப்பெற்ற பின் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.
2015-ல் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதோடு, டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதனால் ஆஸ்திரேலியா தொடரின் மத்தியில் விராட் கோலி கேப்டனாக பதவி ஏற்றார்.
அதன்பின் இலங்கை அணிக்கெதிராக முழுத்தொடரில் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த தொடரை இந்தியா 2-1 எனக்கைப்பற்றியது. அதன்பின் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காள தேசம், ஆஸ்திரேலியா, தற்போது இலங்கை என தொடர்ந்து 8 தொடர்களை இந்தியா வென்றுள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து 8 தொடர்களை வென்ற 2-வது அணி என்ற பெருமையை இங்கிலாந்துடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. இங்கிலாந்து 1884-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 1892-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்து 8 தொடர்களை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியா 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.
இலங்கை தொடர் முடிந்த பின்னர், இந்தியா தனது சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரை இந்தியா கைப்பற்றி தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற பட்டியலில் ஆஸ்திரேலியாவுடன் இணைய வாய்ப்புள்ளது.
தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இந்தியா சாதனை....
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment