மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் ஆசிரியர்களுக்கான விடுதி திறப்பு விழா....
மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் ஜப்பானிய மக்களின் நிதிப்பங்களிப்பில் ஜப்பானிய அரசின் (UN Habitat) உதவியுடன் பாடசாலையின் அபிவிருத்திக்குழுவினரால் அமைக்கப்பட்ட சுமார் 13 மில்லியன் ரூபா பெறுமதியான ஆசிரியர்களுக்கான விடுதி திறப்பு விழா 05-08-2017
கல்லூரி முதல்வர் M.Y.மாஹிரின் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக றிஷாட் பதியுதீன் அமைச்சர் மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளர் S.சுகந்தி செபஸ்ரியன் UN Habitat அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை சமூகம் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட றிஷாட் பதியுதீன் அமைச்சர் உறையாற்றும் போது
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் தற்போது படிப்படியாக மறைந்து வருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த அரசிலும், இந்த அரசிலும் நான் பல்வேறு அபிவிருத்திதிட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.
மன்.அல் அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு றிஷாட் பதியுதீன் அமைச்சர் அவர்கள் வகுப்பறையுடன் கூடிய ஒன்றுகூடல் மண்டபத்தினை கட்டித்தருவதாக உறுதியளித்துள்ளார் அத்தோடு அதற்குரிய மதிப்பீட்டுத்தொகை மண்டப வடிவமைப்பு படம் போன்ற தகவல்களை விரைவாக தனக்கு அனுப்புமாறு வலையக்கல்விப்பணிப்பாளருக்கு பணித்துள்ளார்.
கல்விக்குதவியோர் என்றும் இறைவனின் அன்பை பெற்றவர்களே. அதே போன்று ஆசிரிய தொழிலும் புனிதமானது. ஆசிரியர்கள் கடமை உணர்ச்சியுடனும் பொறுப்புணர்வுடனும் தமது கடமையை மேற்கொண்டால் நமது சமூகத்தின் கல்வி மேம்படும். மாணவர்களாகிய நீங்கள் கல்வியை சிறந்த முறையில் கற்று உயர்வடைய வேண்டும் என நான் பிரார்த்திப்பதோடு இந்தப் பாடசாலையின் ஆசிரியர்களுக்கான விடுதியை நிர்மாணித்து தந்த யு என் ஹெபிடாட் நிறுவனத்திற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் ஆசிரியர்களுக்கான விடுதி திறப்பு விழா....
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment