மன்னாரில் இடம் பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள்-மன்னார் பிரஜைகள் குழு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை புதன் கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து மன்னாரில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தரும்,மனித உரிமை செயற்பாட்டாளருமான அந்தோனி சகாயம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவினர் இணைந்து நடாத்தவிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நாளை புதன் கிழமை (30.08.2017) காலை 9.00 மணிக்கு மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இடம் பெறவுள்ளது.
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு ஊர்வலம் மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடையும்.
அதனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களினால் அமைதி விழிர்ப்புணர்வு போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும், குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் ஆர்வலர்கள்,பொது அமைப்பினர் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான அந்தோனி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவினர் இணைந்து நடாத்தவிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நாளை புதன் கிழமை (30.08.2017) காலை 9.00 மணிக்கு மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இடம் பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களினால் அமைதி விழிர்ப்புணர்வு போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும், குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் ஆர்வலர்கள்,பொது அமைப்பினர் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான அந்தோனி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம் பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள்-மன்னார் பிரஜைகள் குழு
Reviewed by NEWMANNAR
on
August 29, 2017
Rating:

No comments:
Post a Comment