அண்மைய செய்திகள்

recent
-

லண்டன் வாழ் இலங்கையர் வீட்டின் மீது இனவெறி தாக்குதல்!


லண்டனில் தமிழர்கள் வாழும் வீடொன்றில் இன வன்முறைகளை தூண்டும் வகையிலான தகாத வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

liverpool பிராந்தியத்திலுள்ள Speke என்ற இடத்திலுள்ள வீட்டின் வெளியே அசிங்கமான இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதனை காண முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வீட்டின் வெளி பகுதி சுவரின் மீது கறுப்பு நிறத்தில் தகாத வார்த்தைகள் மற்றும் அல்லாஹு அக்பர் என இனவெறி வசனம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லாஹு அக்பர் என்பது “அல்லாஹ்வே சிறந்தவர்” என்று மொழி பெயர்க்கப்படும் ஒரு அரபு சொற்றொடராகும்.

முஸ்லிம்கள் மற்றும் அரபு பேசுபவர்களினால் விசுவாசத்தின் வெளிப்பாடாக எழுதப்படுகின்ற ஒரு வார்த்தையாகும்.

நேற்று இரவு பிற்பகுதியில் அல்லது இன்று அதிகாலையில் இனவெறியாளர்களினால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Stapleton Avenue பகுதியில் உள்ள குறித்த வீடு தற்போது வரையில் காலியாகவே உள்ளன. எனினும் லண்டனில் கடந்த 11 வருடமாக வாழ்ந்த இலங்கை குடும்பம் ஒன்று அங்கு குடியேறவுள்ளனர்.

இனவெறி தாக்குதலை மேற்கொண்டவர்கள் புதிதாக தங்கள் அண்டைய வீட்டிற்கு வருபவர்கள் இலங்கையர்கள் அல்ல பாகிஸ்தானியர் என தவறாக புரிந்து கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் இந்துக்களே தவிர முஸ்லிம்கள் அல்ல.

கடந்த இரண்டு வருடங்களாக Speke பகுதியில் வாழ்ந்த குறித்த இலங்கை குடும்பத்தின் 5 உறுப்பினர்கள் மீளவும் இந்த வீட்டில் குடியேறவுள்ளனர். இதற்காக வீட்டிற்கு வெள்ளை அடிக்கப்பட்டுள்ளதுடன், உடைக்கப்பட்ட ஜன்னல்கள் மீளவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வீட்டை தற்போது மீளவும் ஆயத்தப்படுத்தி வருகின்றோம். எங்கள் குடும்பத்தினருடன் அங்கு சென்று குடியேறவுள்ளோம் என பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டின் தற்போதைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நான் கடந்த 11 வருடங்களாக லண்டனில் வாழ்ந்து வருகின்றோம். எனது சகோதரனுடன் இங்கு குடியேறவுள்ளோம். இவ்வாறான சம்பவம் இதற்கு முன்னர் பார்த்ததில்லை. நாங்கள் முஸ்லிம்கள் அல்ல நாங்கள் இந்துக்கள். அத்துடன் நாங்கள் பயங்கரவாதத்தை வெறுக்கின்றோம்.

தற்போது வருத்தமாகவும், பயமாகவும் உள்ளது. எனது மனைவி மற்றும் மூன்று இளம் பிள்ளைகளுடன் இங்கு குடியேறவுள்ளோம்.

இனவெறி குழு தாக்குதல் மேற்கொண்டமை குறித்து வருத்தமடைந்த அண்டைய வீட்டார்கள் எங்களை பார்ப்பதற்கு பரிசு மற்றும் இனிப்பு பண்டங்களுடன் சந்தித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனவெறி ரீதியான சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதாக பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய நேரப்படி நேற்று மதியம் 12.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த இலங்கை குடும்பத்தின் உறவினர்கள் இந்த பகுதியில் வசிக்கும் நிலையில் இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

லண்டன் வாழ் இலங்கையர் வீட்டின் மீது இனவெறி தாக்குதல்! Reviewed by Author on August 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.