மக்களிடையே தீய எண்ணப்பாடுகள் விதைக்கும் போது நல்லிணக்க செயற்பாடுகள் குழப்பமடையும்:நஸீர்
தங்களது சுய இலாபத்திகாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மக்களை பாதிப்பதாகவும் தங்களது கதிரைகளை பாதுகாப்பதற்காக மக்களிடையே தீய எண்ணப்பாடுகள் விதைக்கும் போது நல்லிணக்க செயற்பாடுகள் குழப்பமடைவதாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தேசிய நல்லிணக்க திட்டம் தொடா்பான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டு மக்கள் மனதில் வஞ்சத்தினை வைத்துக் கொண்டு நல்லிணக்கத்தினைப் பேச முடியாது.
இன்னுமொரு இனத்தினை நசுக்கும் விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கும் மக்களால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது.
ஒரு சிலரின் செயற்பாட்டால் நல்லிணக்கம் குழப்பமடைகின்றது. மக்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவது பெரிதான விடயமல்ல.
மேலும், அரசியல் இலாபத்திற்காகச் செயற்படுகின்றவர்களை அடையாளம் கண்டு ஓரங்கட்ட முடியுமானால் மக்களிடையே நல்லிணக்கம் தானாகவே ஏற்படும் என முதலமைச்சர் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடையே தீய எண்ணப்பாடுகள் விதைக்கும் போது நல்லிணக்க செயற்பாடுகள் குழப்பமடையும்:நஸீர்
Reviewed by Author
on
August 01, 2017
Rating:

No comments:
Post a Comment