ஸ்மார்ட் போன் வெடித்து வாலிபரின் தொடை கருகியது.
ஆந்திர மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் பாக்கெட் பையில் இருந்த ஸ்மார்ட் போன் வெடித்து சிதறியதால் அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் ரவுலாபாலேம் பகுதியை சேர்ந்த பாவனா சூரியகிரண் என்பவர், கடந்த 20 நாட்களுக்கு முன்பு, ஓன்லைனில் மூலம் ஸியோமி ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்மார்ட் போன், திடீரென்று வெடித்து சிதறியுள்ளது.
இதில், போன் முழுமையாக தீயில் கருகியதோடு மட்டுமல்லாமல், கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த பகுதி கருகியுள்ளது.
இதனால், தனது உடலில் ஏற்பட்ட காயத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஸியோமி நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்மார்ட் போன் வெடித்து வாலிபரின் தொடை கருகியது.
Reviewed by Author
on
August 19, 2017
Rating:

No comments:
Post a Comment