இந்தியாவை வீழ்த்தினால் உலக கிண்ணத்திற்கு நேரடி தகுதி: சாதிக்குமா இலங்கை?
இந்தியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றால் 2019 உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறும்.
ஐசிசி ஒரு நாள் தரவரிசை பட்டியலில் 88 புள்ளிகளுடன் இலங்கை 8வது இடத்தில் உள்ளது. 9வது இடத்தில் 78 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் உள்ளது.
2017 செப்டம்பர் 30ம் திகதியோடு உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு முடிவடைகிறது. தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.
இந்நிலையில், இந்தியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றால் இலங்கை 90 புள்ளிகளை எட்டும்.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த மாதம் அயர்லாந்துடன் ஒரே ஒரு ஒரு நாள் போட்டியிலும், அதை தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
78 புள்ளிகளில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் அனைத்து ஒரு நாள் போட்டிகளிலும் வென்றாலும் இலங்கையை விட இரண்டு புள்ளிகளே பெறும்.
இந்தியாவிற்கு எதிராக இரண்டு ஒரு நாள் போட்டியில் வெற்றிப்பெறும் பட்சத்தில் இலங்கை 90 புள்ளிகளுடன் நேரடியாக 2019 உலக கிண்ணத்திற்கு தகுதி பெறும்.
இந்தியாவை வீழ்த்தினால் உலக கிண்ணத்திற்கு நேரடி தகுதி: சாதிக்குமா இலங்கை?
Reviewed by Author
on
August 19, 2017
Rating:

No comments:
Post a Comment