எல்லாவற்றிலும் நாம் தோல்வியாகி விடுவமோ!
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக மலர்ந்ததன் பின்னணியில் முக்கியமான மாற்றங்கள் நடந்துள்ளன.
அதில் எழுக தமிழ் எனும் மக்கள் எழுச்சிப் பேரணி தமிழ் மக்களின் உத்வேகத்தை ஏற்படுத்தியதுடன் எங்கள் உரிமை விடயத்தில் நாங்களும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விழிப்பை ஏற்படுத்திற்று.
இப்போது தமிழினத்தின் விடயத்தில் மக் கள் விழிப்பாக இருக்கின்றனர்.
அரசியலமைப்புச் சீர்திருத்தம் வருகிறது என்ற நம்பிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் எல்லாவற்றையும் குழப்ப முற்பட்டனர்.
இச்சூழ்நிலையில்தான் தமிழ் மக்கள் பேரவை உருவாகியது. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர் கள் நல்லாட்சியை நம்பினார்.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இனப் பிரச் சினைக்குத் தீர்வு காண்பர் என நம்பினார்.
அதற்குச் சான்றாக அரசியலமைப்புச் சீர் திருத்தம் அமுலுக்கு வரும் எனவும் நம்பினார்.
என்ன செய்வது வயதில் முதிர்ந்த ஒரு தமிழ்த் தலைவரை நல்லாட்சியினரும் ஏமாற்றினர் என்பதுதான் உண்மையாகப் போகிறது.
தனது காலத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட வேண்டும் என்று பெரு விருப்புக் கொண்டிருந்த இரா.சம்பந்தரின் விருப்பம் நிறைவேறாது என்பது மட்டும் உண்மை.
அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஒருபோதும் நடைமுறைக்கு வரவும் மாட்டாது. வரவிடவும் மாட்டார்கள்.
இதை இவ்விடத்தில் நாம் பல தடவைகள் கூறியிருந்தோம். இப்போதும் அதைத்தான் நாம் கூறமுடியும்.
உண்மையில் ஆட்சியாளர்களுடன் இணை ந்து சென்று தீர்வைப் பெறலாம் என்பது கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தரின் நினைப் பாக இருந்தது.
இது அவரின் வெளிப்படையான முடிவு. ஆனால் அவருடன் சேர்ந்து இருந்த சிலர் அரசாங்கத்துக்கு இசைவாக நடக்கலாயினர்.
அரசுடன் இணைந்து சென்று தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருந்த சர்வதேச நிலைவரத்தை பழுதாக்கி அதை செல்லுபடியற்ற தாக்கினர்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படா விட்டாலும் அதைப் பற்றிப் பரவாயில்லை. தமிழ் அரசியல் தலைமையே சர்வதேச அழுத்தத்தை விரும்பாத போது சர்வதேசம் தாமாக மூக்கை நுழைக்காதல்லவா?
ஆக, சர்வதேச அழுத்தத்தை தமிழ் அரசி யல் தலைமையினூடாக வெற்றிகரமாக முறி யடித்த நல்லாட்சி இப்போது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை தட்டிவிடுவதற்கு எத்தனிக்கிறது.
எனினும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் வெளிவரும் என்று தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நிச்சயம் தமிழ் மக்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்.
எதுவாயினும் தீர்வுக்கான களநிலையைத் தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் உறுதி யாக இருக்கின்ற போதிலும் அவருக்கும் இடுக் கண் விளைவிக்க அவரோடு கூட இருக்கும் சிலர் முற்படுவதாக அறியும்போது நெஞ்சு வெடித்துவிடும் போல் உள்ளது.
-நன்றி -வலம்புரி-
எல்லாவற்றிலும் நாம் தோல்வியாகி விடுவமோ!
Reviewed by Author
on
August 13, 2017
Rating:

No comments:
Post a Comment