மன்னாரில் பல பகுதிகளில் மழை.....
மன்னாரில் பல பகுதிகளில் நேற்றிரவு கடும் மழை பெய்தது மன்னாரில் இதுவரை காலமும் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவி வந்த நிலையில் தற்போது மன்னாரின் பல பாகங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கின் பல பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவியதால் மக்களும், விவசாயிகளும் அத்தோடு கால்நடைகளும் கடும் இடர்களை எதிர்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நீண்ட நாட்களின் பின்னர் பொழிந்த மழை காரணமாக மன்னார் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"வறண்டநிலங்களுக்கும் மிரண்டவிவசாயிகளுக்கும் சற்று மகிழ்ச்சி"
மன்னாரில் பல பகுதிகளில் மழை.....
Reviewed by Author
on
August 13, 2017
Rating:

No comments:
Post a Comment