திகில் படங்களான முனி, காஞ்சனா பட வரிசையில் மீண்டும் ரசிகர்களை பயமுறுத்த வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்
நடன இயக்குனராய் திரையுலகில் அறிமுகமான ராகவா லாரன்ஸ், பின்னர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ போன்ற படங்கள் சமீபத்தில் வெளியானது. தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ். இந்தப் புதிய படத்தை இவரே நடித்து, இயக்கவிருக்கிறார்.
மேலும் இந்தப் படம் ‘முனி’ பாகங்களின் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. திகில் காமெடி வரிசையில் வெளியான ‘முனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காஞ்சனா (முனி 2), காஞ்சனா 2 (முனி 3) ஆகிய அதன் முந்தைய பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடை நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘முனி 3’ படத்தின் இறுதியிலேயே ‘முனி 4’ விரைவில் என லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
இந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்க இருப்பதாகவும், படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தப் படம் ‘முனி’ பாகங்களின் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. திகில் காமெடி வரிசையில் வெளியான ‘முனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காஞ்சனா (முனி 2), காஞ்சனா 2 (முனி 3) ஆகிய அதன் முந்தைய பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடை நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘முனி 3’ படத்தின் இறுதியிலேயே ‘முனி 4’ விரைவில் என லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
இந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்க இருப்பதாகவும், படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
திகில் படங்களான முனி, காஞ்சனா பட வரிசையில் மீண்டும் ரசிகர்களை பயமுறுத்த வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்
Reviewed by Author
on
August 23, 2017
Rating:

No comments:
Post a Comment