வவுனியா சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.
வவுனியா சுகாதார அதிகாரிகள் பணிமனைக்கு முன்பாக நிரந்தர நியமனம் கோரி கடந்த 118 நாட்களாக சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார தொண்டர்கள் மேற்கொண்டு வரும் குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் இன்றைய தினம் விஜயம் செய்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வினை பெற்றுத் தருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வாக்குறுதி வழங்கியதை அடுத்து சுகாதார தொண்டர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு மாத காலத்திற்குள் தமக்கான தீர்வினை பெற்றுத் தராவிட்டால் அதன் பிறகு மீண்டும் எமது போராட்டத்தைத் தொடர்வோம் என சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.
Reviewed by Author
on
August 30, 2017
Rating:

No comments:
Post a Comment