கிழக்கு மாகாண ஊழியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வை எடுக்க நடவடிக்கை.....
கிழக்கு மாகாணத்தில் உள்ள சிற்றூழியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
திருகோணமலை இலங்கை துறைமுகப் பட்டணத்தில் ஆரம்ப வைத்திய சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,
இன்று எந்த வைத்தியசாலைக்கு சென்றாலும் எம்மிடம் சிற்றூழியர் பற்றாக்குறை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது, பௌதீக ரீதியான வளங்களை நாம் கொண்டு சேர்க்கின்ற போதும் ஆளணிப் பற்றாக்குறையினால் மக்களுக்கு அபிவிருத்தியின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போகின்றது.
எனவே இது தொடர்பான முழுமையான ஆவணங்களை நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்துள்ளோம். சிற்றூழியர்களை நியமிப்பதற்கான அனுமதியை நாம் விரைவில் எதிர்ப்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண கல்விமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கு மாகாண ஊழியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வை எடுக்க நடவடிக்கை.....
Reviewed by Author
on
August 09, 2017
Rating:

No comments:
Post a Comment