நாகசாகி நகரை நாசமாக்கிய 'கொழுத்த மனிதன்' !
மரணத்தின் விளிம்பில் துடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு ஜப்பானியரும் மறக்க முடியாத நாளாக ஆகஸ்ட் 9 திகதி உள்ளது. ஜப்பானியர் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் மறக்க முடியாத நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.
சுமார் 72 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானின் நாகசாகி நகர் மீது “கொழுத்த மனிதன்” என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்ட நாள் இன்றாகும்.
உலகையே அதிர வைத்த இரண்டாம் உலகப்போரின் மிகப்பெரிய தாக்குதல் எது வென்றால் ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகர்கள் மீது வீசப்பட்ட அணுகுண்டு தாக்குதலேயாகும்.
இந்த நிலையில் உலக வரலாற்றில் இரண்டாம் முறை அணுகுண்டு போருக்காகவும், தன்னைத் தாக்கிய ஜப்பானை தாக்கி அழிப்பதற்காகவும் கொழுத்த மனிதன் பயன்படுத்தப்பட்டான்.
எனினும், முதல் அணுகுண்டு “சின்ன பையன்” என பெயரிடப்பட்டு ஆகஸ்ட் 6 ஆம் திகதி காலை ஹிரோஷிமா நகரின் மீது வெடிக்கப்பட்டது.
பின்னர் மூன்று நாட்களுக்கு பிறகு 2ஆவது அணுகுண்டு “கொழுத்த மனிதன்” நாகசாகி நகரின் மீது வீசப்பட்டது.
இந்த அணுகுண்டு வீச்சுக்களால் சுமார் 120,000 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழுத்த மனிதன் அணுகுண்டு புளுட்டோனியம் கருவை கொண்டு அமைக்கப்பட்டதாகும்.
இக்குண்டு அமைக்கப்பட்ட நாடாக ஐக்கிய அமெரிக்கா உள்ளது. இதன் எடை 10,200 இறாத்தல்(4630 கிலோ கிராம்), நீளம் 10.6 அடி(3.25 மீற்றர்), விட்டம் 5அடி(1.52 மீற்றர்) என கூறப்படுகின்றது.
நிலத்தில் இருந்து 1.800 அடிகள் உயரத்திலிருந்து பொப்ஸ்கார் என்ற பி. 29 ரகப் போர் விமானத்தில் இருந்து மேஜர் சார்ள்ஸ் சுவீனி என்ற விமானியால் இந்த அணுகுண்டு வீசப்பட்டது.
நாகசாகி மலைப்பாங்கான பகுதி என்பதன் காரணமாக ஹிரோஷிமாவில் ஏற்பட்ட தாக்குதலுடன் ஒப்பிடும் போது இங்கு குறைவான விளைவுகளே ஏற்பட்டுள்ளன.
சக்தி வாய்ந்த இந்த அணுகுண்டு ஜப்பான் மீது தொடுக்கப்பட்டதால் சுமார் 39,000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 25,000 பேர் காயமடைந்துள்ளனர்.
பெண்கள் கொடுமைகளுக்கும், வன்புணர்வுக்கும் அதிகளவில் உட்படுத்தப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்கள் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும்.

நாகசாகி நகரை நாசமாக்கிய 'கொழுத்த மனிதன்' !
Reviewed by Author
on
August 09, 2017
Rating:

No comments:
Post a Comment