அண்மைய செய்திகள்

recent
-

இது புலம்பெயர்ந்தவர்களுக்கானது! டொனால்டு டிரம்ப் அறிவிப்பு...


அமெரிக்காவில் புகலிடம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படமாட்டாது என அந்நாட்டின் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் புகலிடம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்களை தகுதியின் அடிப்படையில் அனுமதிக்கும் புதிய நடைமுறைக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.

ஆனால், நேற்று வானொலி நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் பேசியது புலம்பெயர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘கடந்த காலங்களில் புகலிடம் கோரி வந்த புலம்பெயர்ந்தவர்கள் உடனடியாக அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் அடைந்தனர். ஆனால், இது இனிமேல் நடைமுறையில் இருந்து நீக்கப்படும்.

இனிவரும் காலங்களில் அமெரிக்காவில் புகலிடம் கோரி வரும் அனைவருக்கும் முதல் 5 ஆண்டுகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட மாட்டாது.

இதன் மூலம், அமெரிக்கர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு ஏற்படுவதுடன் ‘அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்’ என்ற தனது தேர்தல் வாக்குறுதி நிறைவேறும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது புலம்பெயர்ந்தவர்களுக்கானது! டொனால்டு டிரம்ப் அறிவிப்பு... Reviewed by Author on August 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.